தீபாவளி போனஸ் அறிவிப்பு: ஒன்றிய அமைச்சரவையில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள், வெளியுறவு கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. மேலும், அடுத்த சில வாரங்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, போனஸ் குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: