கோவை துடியலூரில் அழகு நிலைய ஊழியரின் கை கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று உடற்பாகங்கள் கிணற்றில் கண்டெடுப்பு: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை துடியலூரில் குப்பை தொட்டி ஒன்றில் அழகு நிலைய ஊழியரின் கை கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று உடற்பாகங்கள் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த 15ம் தேதி அடையாளம் தெரியாத நபரின் காய் ஒன்று துண்டாக கிடந்ததை தூய்மை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். 8 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரனை தொடங்கினர். காட்டூர் காவல்நிலையத்தில் 39 வயதான பிரபு கடந்த 15ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்திருந்த நிலையில், சோதனையில் அது அவருடைய கை தான் என்பது உறுதியானது.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்தவரான பிரபுவின் கை மட்டும் தனியாக கிடந்ததால் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது. அப்படியானால் உடற்பாகங்கள் எங்கே? என்ற கேள்வி எழுந்த நிலையில், தனிப்படை போலீசார் துடியலூர் பகுதியில் சோதனையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் பிரபுவின் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பிரபு கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. பிரபுவை கொலை செய்தது யார்? சினிமா பாணியில் எதற்காக உடல்பாகங்களை தனித்தனியாக வீசியுள்ளனர்? என்று தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

Related Stories: