குன்னூர் அருகே காலில் காயத்துடன் சுற்றி திரியும் சிறுத்தை: வனத்துறையினர் சிகிச்சை அளிக்க கோரிக்கை.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இறை  மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில்  சர்வ சாதாரணமாக உலா வருகிறது. குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு நாய்களை தேடி சிறுத்தைகள் வருவது வழக்கம். இந்த நிலையில்  அருவங்காடு அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று வந்துள்ளது. சிறுத்தை காலில் காயத்துடன் நடந்து செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: