விகேபுரம் அருகே பராமரிப்பின்றி சேதமடைந்த பாபநாசம் பிரதான சாலை-வாகனஓட்டிகள் அவதி

வி.கே. புரம் : நெல்லையில் இருந்து பாபநாசத்திற்கு செல்லும் பிரதான சாலை விகேபுரம் பகுதியில் முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உருக்குலைந்து சேதமடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவதிப்படுகின்றனர். நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் பைக், மொபட், ஆட்டோ, வேன், லாரி, பஸ்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் வந்துசெல்கின்றன.

இருந்தபோதும் இந்த பிரதான சாலையின் பல்வேறு பகுதிகளில் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வி.கே.புரம் அருகே மருதம் நகர் பகுதியில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படாத காரணத்தால் இந்த பிரதான சாலை குண்டும், குழியுமாக உருக்குலைந்துள்ளது. இதனால் இருசக்கரவாகனத்தில் செல்வோர் உள்ளிட்ட அனைவரும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி கள ஆய்வு நடத்தி தேவையான இடங்களில் சாலையை சீரமைக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: