×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம்-வலிவலத்தில் கலெக்டர் நேரடி நெல் கொள்முதல் செய்தார்

கீழ்வேளூர் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயந்திரம் மூலம் குறுவை அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து வலிவலத்தில் கொள்முதல் நிலையத்தை திறந்து கலெக்டர் அருண்தம்புராஜ் நெல் கொள்முதல் செய்தார்.காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை மே மாதம் 24ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறுவை அறுவடை பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலத்தில் இந்த பருவத்திற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து தொடங்கி வைத்தார். பின்னர் கொத்தங்குடி, ஈசனூர் ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகளிடம் எவ்வித குறைபாடுமின்றி நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்தினார்.

பின்னர் வலிவலம் கடைத் தெருவில் மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுக்களுக்கு மஞ்சள் பை வழங்கினார். தொடர்ந்து கீழ்வேளூரை அடுத்த வடக்காலத்தூரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நர்சரி கார்டன், வடக்குபனையூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 8.65 லட்சம் மதிப்பில் பிடாரிகுளம் தூர்வாரும் பணிகள், சுற்றுசுவர் கட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகுமார், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தியாகராஜன், ராஜகோபால், வடக்காலத்தூர் ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் கூறுகையில்,பாதுகாப்பான சுகாதாரம், தூய்மையான சுற்றுப்புறங்கள், ஆரோக்கியம், உற்பத்திதிறன், பாதுகாப்பு ஆகியவை வாழ்க்கை தரத்திற்கு இன்றியமையாதது.

இதனால் தற்போது கிராமப்புறங்களில் ஒருங்கிணைந்த தீர்வு காண்பதற்கு நம்ப ஊரு சூப்பரு என்ற சிறப்பு இயக்கம் செயல்படுதி வருகிறது. அனைத்து கிராமபுறங்களில் சுகாதாரம், விழிப்புணாவு, ஆரோக்கியம், நல்வாழ்வை மேம்படுத்துதல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் ஒரு முறை பயன்படுதும் நெகிழியினை தடை செய்தல், நீர் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான பணிகளை மேற்கொண்டு சுத்தமாகவும், பசுகையாகவும், சுகாதாரமாகவும், பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் மண்ணையும், சுற்றுசூழலையும் காக்கும் பொருட்டு பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துவதை அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடம் மஞ்சள் பை வழங்கப்பட்டுள்ளது.

Tags : Nagapattinam ,Kuruvai ,Valivalam , Kilivelur: In Nagapattinam district, harvesting of kuruvai by machine is going on in full swing. Then in pain
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்