×

புதுச்சேரியில் காய்ச்சலால் புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக சளி மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரி, காரைக்காலில் 829 குழந்தைகள் காய்ச்சலால் பாதித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் காய்ச்சலால் புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 747 ஆக குறைந்துள்ளது. புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் எண்ணிக்கை 829-ல் இருந்து 747 ஆக குறைந்த நிலையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 66 பேர், ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 697 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 66 என மொத்தம் 829 குழந்தைகள் நேற்று முன்தினம் காய்ச்சலால் பாதித்து வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனர். தற்போது, இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 37 குழந்தைகளும், ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையி்ல 140, காரைக்கால் அரசு மருத்துவமனையில் 22 பேர் என மொத்தம் 199 குழந்தைகள் உட்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் மட்டும் இந்த கணக்கீடு எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளை சேர்த்தால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் எண்ணிக்கை குறைந்த நிலையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று சுகாதார துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.


Tags : Puducherry , In Puducherry, the number of children receiving outpatient treatment for fever is low
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது