டெல்லி சாலை தடுப்பில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏரியதில் 4 பேர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

டெல்லி: டெல்லி சாலை தடுப்பில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏரியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம்  அடைந்துள்ளனர். டெல்லி சீமாபுரி நள்ளிரவில் தாறுமாறாக சென்ற லாரி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. விபத்தில் 52 வயது கரீம், 25 வயது இளைஞர் சோட்டி கான், ஷா ஆலம் (38), ராகுல் (45) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

Related Stories: