கிழக்கு கடற்கரை சாலையில் மின் கம்பம் மீது கார் மோதி முதியவர் பலி

துரைப்பாக்கம்: கடலூர் மாவட்டம், புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜரங்கன் (63). இவர் தனது நண்பருடன் காரில் நேற்று அதிகாலை சென்னை புறப்பட்டார். காரை டிரைவர் வெங்கடேசன் ஓட்டி வந்தார். கடலூரில் இருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக 3 பேர் பயணம் செய்தனர். கானத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கார் சென்றபோது, டிரைவர் வெங்கடேசன் தூக்க கலக்கத்தில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் காரை மோதினார். இதில், மின் கம்பம் உடைந்து கீழே விழுந்ததில், கார் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டனர்.

இதில், ராஜரங்கன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த  2 பேரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: