அச்சிறுப்பாக்கத்தில் ஒன்றிய குழு கூட்டம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், சசிகலா, இன்ஜினியர் அறிவழகன், மேற்பார்வையாளர்கள் பரிமளா தேவி, வானதி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மக்கள் நலன் சார்ந்த சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: