மதுராந்தகத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில்  ஏராளமான விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்து அதன் அறுவடை சீசன் தற்பொழுது தொடங்கியுள்ளது. அறுவடை செய்து வைத்துள்ள நெல்லை அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யவேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று  காலை செல்லியம்மன் கோயில் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மலர்விழிக்குமார் தலைமை தாங்கினார்.

திமுக நகர செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க துணை தலைவர் தயாளன் அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்  க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.டி.அரசு மதுராந்தகம் நகர மன்ற துணை தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: