திருவள்ளூரில் வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூரில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வுகளுக்கு  இலவச பயிற்சி வகுப்பு  நடைபெறுவதாக கலெக்டர் கூறினார், பாரத ஸ்டேட் வங்கியால் 5486 ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களுக்கும், ஸ்டாப் செலக்க்ஷன் கமிஷனால் 20 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே ஏற்கனவே விண்ணப்பித்த, விண்ணப்பிக்க உள்ள பட்டப்படிப்பு கல்வித்தகுதியுடைய திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு  https;//bank.sbi/ carrer or https;/sss.nic.in/careers என்ற இணைய வழியில் வருகிற 27 ந் தேதக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஸ்டாப் செலக்க்ஷன் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு  https;//ssc.nic.in என்ற இணைய வழியில் வருகிற அக்டோபர் மாதம் 8 ந் தேதிக்குள் விண்ணிப்பிக்க

வேண்டும். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம்.

இலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 24 ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044 - 27660250 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9499055893 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: