போதை பொருள் விழிப்புணர்வு போட்டி

திருத்தணி: போதைபொருள் விழிப்புணர்வு குறித்து போட்டிகள் நடந்தது. திருத்தணி சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.  போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் சமுதாய பிரச்னைகள் மற்றும் கேடுகள் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஒவியம்  போன்ற போட்டிகள் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் சியாமளாரங்கநாதன் தலைமை வகித்தார்.

சென்னை பல்கலைக் கழக முன்னாள் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் பேராசிரியருமான வி.ரங்கநாதன் பங்கேற்று, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போதை விழிப்புணர்வு குறித்து நடந்த  கட்டுரை, பேச்சு ஒவிய  போட்டிகளில் முதல் இடங்களை பிடித்த மாணவமாணவியருக்கு பரிசுகளை பள்ளி தாளாளர் சியாமளாரங்கநாதன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள்  கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் துரைகுப்பன் நன்றி கூறினார்.

Related Stories: