×

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை:தமிழகத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக முக்கிய கோயில்களில் கலை பண்பாட்டுத்துறையினருடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயிலில் தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் புலவர் ராஜாராம் தலைமையில் பட்டிமன்றம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுசித்ரா குழுவினரின் பக்தி பாட்டு, திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் மஹதி குழுவினரின் பக்தி இன்னிசை, திருவானைக்காவல்,

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோயிலில் எஸ்.கே நாட்டிய கலா நிகேதன் அகாடமி நடத்தும் பரதநாட்டியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், ராமேஸ்வரம், அருள்மிகு ராமநாதசுவாமி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருவொற்றியூர்,  வடிவுடையம்மன் ம்கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், சென்னை சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் நவராத்திரி திருவிழாவின்போது ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Tags : Navratri festival ,Minister ,Shekharbabu , On the occasion of Navratri festival, spiritual discourses will be held in temples: Minister Shekharbabu informs
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...