ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; கர்நாடகாவில் பதுங்கிய 2 தீவிரவாதிகள் கைது: மற்றொருவர் தலைமறைவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாநகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்கள் தங்கி இருந்த பாழடைந்த கட்டிடத்தை போலீசார் நேற்று காலை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், எலெக்ட்ரானிக்  பொருட்கள், டைரி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதாவர்கள் ஷிவமொக்காவை சேர்ந்த இன்ஜினியர்  சையத் யாசின் (22), மங்களூரு மாவட்டத்தை சேர்ந்த மாஸ் முனீர் அகமது (22) என்று விசாரணையில் தெரிந்தது.

முனீரும் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர்களை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமறைவாக உள்ள ஷிவமொக்கா மாவட்டம்,  தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்கை (24) தேடி  வருகின்றனர். கைதான 2 பேரிடம் விசாரித்தால், மேலும் பலர்கள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: