×

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் சமந்தா

சென்னை: ஸ்கின் அலர்ஜி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார், நடிகை சமந்தா. சமந்தாவுக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளதன் காரணமாக, சூரிய ஒளியில் நின்றாலும், படப்பிடிப்பில் பயன்படுத்தும் மின்விளக்குகள் முன் நின்றாலும் தோலில் அலர்ஜி ஏற்படும். கடந்த சில வருடங்களுக்கு முன்பும் சமந்தாவுக்கு இதுபோல் பிரச்னை ஏற்பட்டது. அப்போது மணிரத்னத்தின் ‘கடல்’, விக்ரம் நடித்த ‘ஐ’  படங்களில் நடிக்க தேர்வாகி, பிறகு அப்படங்களில் இருந்து விலகினார். இதற்கு அப்போது ஏற்பட்ட ஸ்கின் அலர்ஜிதான் காரணம். அந்த நேரத்தில் தொடர்ந்து சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு தேறினார். பிறகு நிறைய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் சமந்தாவுக்கு அதே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், முன்பு போல் சோஷியல் மீடியா வில் அவர் ஆக்டிவ்வாக இல்லை. கடந்த ஒரு மாதமாக சோஷியல் மீடியாவில் எந்தப் பதிவும் வெளியிடவில்லை. படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் அவர், ஸ்கின் அலர்ஜிக்கு சிகிச்சை பெற அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.


Tags : Samantha ,United States , Samantha goes to America for treatment
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்