×

10 வருடங்களுக்கு பிறகு நடிக்கிறார் ராமராஜன்

சென்னை: கடந்த 2012ல் ‘மேதை’ என்ற படத்தில் நடித்திருந்த ராமராஜனுக்கு பிறகு வாய்ப்புகள் வரவில்லை. 10 வருடங்களாக நடிக்காத ராமராஜன், தற்போது ‘சாமானியன்’ படத்தில் நடித்துள்ளார். இது அவரது 45வது படமாகும். மதியழகன் தயாரித்துள்ளார்.  ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. டிரைலர் வெளியீட்டு விழாவில் ராமராஜன் பேசியதாவது: விபத்தில் சிக்கி முடங்கி இருந்தேன்.

பிறகு மீட்டிங்கும் இல்லை, ஷூட்டிங்கும் இல்லாமல் தவித்தேன். ஹீரோவாகவே நடிப்பேன் என்று எங்கே சொன்னேன் என்று ஞாபகம் இல்லை. ஆனால், ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்பதுபோல் அதையே நானும் ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.

Tags : Ramarajan , Ramarajan is acting after 10 years
× RELATED ஏன் எதற்கு எப்படி ?