ஐ.நா சபையில் பிரியங்கா சோப்ரா உரை

நியூயார்க்: ஐ.நா சபையில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா உரையாற்றிய நிலையில், அவர் மலாலா உள்ளிட்ட பிரபலங்களையும் சந்தித்தார்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று கலக்கி வரும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘உலகளாவிய ஒற்றுமை என்பது தற்போது முன்பைவிட அதிகமாக தேவைப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் பல நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

காலநிலை மாற்றம், வாழ்வாதார பாதிப்பு, மோதல்கள், இயற்கைச் சீற்றம், வறுமை, இடப்பெயர்வு, பசி, சமூக ஏற்றத்தாழ்வு போன்றவை சமூகத்தின் அடித்தளத்தை அழிக்கின்றன. இதிலிருந்து மீள்வதற்கு உலகம் நீண்ட காலமாக போராடி வருகிறது. உலகம் முழுவதிலும் தற்போது ஏற்பட்ட நெருக்கடி தற்செயலாக ஏற்படவில்லை. இந்த நெருக்கடியில் இருந்து மீள சரியான திட்டத்துடன் செயல்பட வேண்டும். அதற்கான செயல் திட்டம் எங்களிடம் இருக்கிறது’ என்றார். தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலர் மலாலா யூசுப்சாய் உள்ளிட்ட பிரபலங்களை பிரியங்கா சோப்ரா சந்தித்துப் பேசினார்.

Related Stories: