லேவர் கோப்பை: பெடரர், ஜோகோவிச் உற்சாகம்

ஐரோப்பிய அணியுடன் உலக அணி மோதும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடர், லண்டன் O2 அரங்கில் செப். 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரோப்பிய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்), ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), கேஸ்பர் ரூட் (நார்வே), ஆண்டி மர்ரே (இங்கிலாந்து), மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உலக அணியில் டெய்லர் பிரிட்ஸ், ஜாக் சாக், டாமி பால், பிரான்சிஸ் டியபோ  (அமெரிக்கா), பெலிக்ஸ் ஆகர் அலியஸிமி (கனடா), டீகோ ஷ்வார்ட்ஸ்மன் (அர்ஜென்டினா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோர் களமிறங்க உள்ளனர். இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள பெடரர், O2 அரங்கில் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தார். லேவர் கோப்பையில் விளையாடுவதற்காக லண்டன் வந்த ஜோகோவிச் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.

Related Stories: