×

மின் கட்டண உயர்வு: உச்ச நீதிமன்றத்தில் 23ல் விசாரணை

புதுடெல்லி: மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கேவியட் மற்றும் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பின் மேல்முறையீட்டு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் நாளை மறு நாள் விசாரிக்க உள்ளது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமர்வு, ‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்த்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அவரை நியமிக்கும் மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்’’ என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த கேவியட் மனு மற்றும் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு ஆகிய அனைத்தும் நாளை மறுநாள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : Supreme Court , Power tariff hike: Hearing in Supreme Court on 23
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...