ஜனவரி 15 ராணுவ தினம்: டெல்லிக்கு வெளியே ராணுவ அணிவகுப்பு

புதுடெல்லி: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ராணுவ படைகளின் முதல் இந்திய தளபதியாக பீல்டு மார்ஷல் கரியப்பா பொறுப்பேற்றார். இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக டெல்லி கன்டோன்மென்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு வந்தது.

இந்த அணிவகுப்பு தற்போது டெல்லிக்கு வெளியே மாற்றப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும்,  சுழற்சி அடிப்படையில் ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் இந்த ராணுவ தின அணிவகுப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 2023ம் ஆண்டுக்கு பின்னர் இந்த நடைமுறை தொடருமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Related Stories: