×

கேரள முதல்வர் குற்றச்சாட்டு: ஆர்எஸ்எஸ் துதிபாடும் கவர்னர் ஆரிப் கான்

திருவனந்தபுரம்: கேரள  முதல்வர் பினராய் விஜயனுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே  கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்து  உள்ளது. கடந்த சில தினங்களாக 2 பேருக்கும் இடையே நேரடி கருத்து மோதல்  ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கண்ணூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் முதல்வர் பினராய் விஜயன் பேசியதாவது: கவர்னர் பதவி  என்பது ஒரு அரசியலமைப்பு பதவியாகும். அதில் இருந்து கொண்டு மதிப்பற்ற  முறையில் நடந்து கொள்ளக் கூடாது.

கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கு  தனிப்பட்ட முறையில் அரசியல் விருப்பு, வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் அதை  கவர்னர் பதவியில் இருந்து கொண்டு வெளிப்படுத்தக் கூடாது. கவர்னர்  ஆர்எஸ்எஸ் துதி பாடகராக மாறிவிட்டார். பாஜகவினரை விட அதிகமாக ஆர்எஸ்எஸ்  அமைப்பை புகழ்கிறார். அவர் கம்யூனிஸ்ட் விரோதி போல செயல்படுகிறார். கவர்னர்  பல கட்சிகளில் இருந்து உள்ளார். இதனால் அவருக்கு பல கருத்துக்கள்  இருக்கலாம். அப்படிப்பட்ட ஒருவர் தனது சொந்தக் கருத்துக்களை கவர்னர் பதவியிலிருந்து கொண்டு பேசுவது முறையல்ல என்று பினராய்  விஜயன்  பேசினார்.

Tags : Kerala ,Chief Minister ,RSS ,Governor Arif Khan , Kerala Chief Minister accused: RSS praises Governor Arif Khan
× RELATED கடந்த 10 வருடங்களில் எத்தனை...