விமான பயணத்தின் போது பஞ்சாப் முதல்வர் மான் போதையில் இருந்தாரா?.. ஒன்றிய அரசு விசாரணை

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 11ம் தேதி ஜெர்மனி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் ஜெர்மனியில் இருந்து நாடு திரும்ப இருந்தார். அப்போது, பிராங்பர்ட் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் விமானத்தில் இருந்து முதல்வர் பக்வந்த் இறக்கவிடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பிர் சிங் பாதல், ‘‘முதல்வர் பக்வந்த் மான் மது அருந்தி இருந்ததால் பிராங்பர்ட் விமான நிலையத்தில் லுப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்” என்று நேற்று முன்தினம் புகார் எழுப்பினார்.

இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி ஆதாரமற்றது என்று மறுத்துள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பேட்டி அளித்த ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ‘‘சம்பவம் வெளிநாட்டில் நடந்தது என்பதால், பஞ்சாப் முதல்வர் இறக்கிவிடப்பட்டதாக கூறப்படும் புகாரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்’’ என கூறி உள்ளார்.

Related Stories: