புதுச்சேரி அருகே குடும்பத்தகராறில் மருமகள்- மாமியார் தூக்கிட்டு தற்கொலை: தூக்கில் தொங்கிய மகனுக்கு தீவிர சிகிச்சை

திருபுவனை: புதுச்சேரி அருகே குடும்பத்தகராறில்  மாமியார், மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருபுவனை அடுத்த சன்னியாசிகுப்பத்தை சேர்ந்தவர் அன்னக்கிளி (50). இவரது மகன் ஆனந்தராஜ் (30). பெயின்டராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தியாவின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் சந்தியாவும்,  8 மாதங்களுக்கு முன் புதுச்சேரியில் திருமணம் செய்துகொண்டனர்.

சந்தியா 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், ஆனந்தராஜ் வீட்டின் பின்புறம் புதிதாக ஒரு வீட்டை கட்டி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தராஜின் சகோதரிகள், அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் சந்தியாவிடம் ஏதோ கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதனால் சந்தியா மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாக சந்தியாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியபோது புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தராஜ் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகனும், மருமகளும் தூக்கில் தொங்கியதால் அதிர்ச்சியடைந்த அன்னக்கிளி தானும் வீட்டில் தூக்கிட்டு தொங்கினார். அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாமியார், மருமகள் உடல்களை கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனந்தராஜின் சகோதரிகள் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தியதால் விரக்தி அடைந்த சந்தியா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் திருபுவனை போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி 8 மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: