திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை

சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 25ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னைகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. நேற்று 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: