×

தசராவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, குலசேரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், வரும் 1 முதல் 4ம் தேதி வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேரப்பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக, 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி பேருந்து வசதியை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dussehra ,Transport Corporation , Special Buses for Dussehra: Rapid Transport Corporation Announcement
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பஸ்,...