×

மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக இருக்கும் 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக இருக்கும் 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்த்திலுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி காட்டுப் பகுதிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உள்ளிட்ட 300 இந்தியப் பொறியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளார்கள். அங்கு சட்டவிரோத குற்றங்களை செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் அடி, உதை, உடலில் மின்சாரம் பாய்ச்சுதல் முதலான சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தாய்லாந்து நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், ஒரு குற்றமும் செய்யாத நிலையில் இவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது. அவர்களை மீட்டு, தாயகத்திற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Vigo ,Union government ,Myanmar , 60 Tamils held hostage in Myanmar, steps taken to rescue them, WAICO insists to the Union Government
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...