ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்ட அளவிலான தடகள போட்டி தொடங்கியது-கலெக்டர் தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில், வாலாஜா வட்ட அளவிலான தடகள போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்த தடகளப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா தலைமையில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து ஒலிம்பிக் ஜோதியை எற்றி வைத்து சமாதான புறாவை பறக்க விட்டார். ராணிப்பேட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொறுப்பு பி.பிரபு, அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், உடற் கல்வி ஆசிரியர் பால் சத்தியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈ.இளங்கோ வரவேற்றார்.

இந்த தடகள போட்டியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்து ஒலிம்பிக் ஜோதியை எற்றி வைத்து சமாதான புறாவை பறக்க விட்டு முதல் இரண்டு மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஜெயசித்ரா நன்றி கூறினார்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  இதில் வாலாஜா வட்ட அளவிலான அரசு உயர்நிலை மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட இந்த தடகள போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இன்று 20ம் தேதி ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: