மாவட்ட செயலாளர் காரை உடைத்த விசிக பிரமுகர் கைது

பெரம்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காரை அடித்து உடைத்த வழக்கில், அதே கட்சியின் மாநில தொழிற்சங்க துணை செயலாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளை அஷ்டபுஜம் சாலையை சேர்ந்தவர் இரா செல்வம் (50). இவர்  விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மத்திய சென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு அதே கட்சியின் மாநில தொழிற்சங்க துணை செயலாளர் சக்திவேல் (எ) டேவிட் மற்றும் சிலர் செல்வத்தின் வீட்டிற்கு சென்று அவரை போன்செய்து வீட்டிலிருந்து கீழே வருமாறு கூறினர்.

கீழே வந்ததும் அவரிடம் இரட்டைமலை சீனிவாசன் நிகழ்ச்சிக்கு வைத்த பேனரில் எனது பெயரை ஏன் போடவில்லை என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி  செல்வத்தின் காரை அடித்து உடைத்தனர். இதுகுறித்து, செல்வம் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் அயனாவரம் ரங்கையா தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (எ) டேவிட் (52). என்பவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: