பூக்கடை பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பூக்கடை பேருந்து நிலையத்தில் கொத்தவால்சாவடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகள், காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களிடையே போதைப் பொருள் ஒறிப்பு தொடர்பாக  விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது.

பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது, போதை பழக்கத்தால் ஏற்படும் ஆபத்து குறித்தும், போதை மாத்திரை, போதைப்பொருள், போதை பாக்கு ஆகியவை பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டை ஏற்படும் என்று கல்லூரி மாணவிகள் பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசாரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற உதவி ஆணையர் சீதாராமன், எஸ்பினேடு  காவல் ஆய்வாளர் அலெக்ஸ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், காவல்துறையினர் மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பு சமூதாய நலக்கூடத்தில் போதை விழிப்புணர்வு குறித்த சிறுவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஆர்வமுடன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் பேசினர். போதை விழிப்புணர்வு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. போதையால் ஏற்படும் சீரழிவு மாணவர்கள் போதையில் அடிமையாக கூடாது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், உயர் நீதிமன்ற காவல் உதவி ஆணையர் சீதாராமன், ஏழு கிணறு ஆய்வாளர் மனோன்மணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: