வேளச்சேரி ரயில்வே குடியிருப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: உயரதிகாரிகள் பங்கேற்பு

வேளச்சேரி: வேளச்சேரி அருகே ரயில்வே குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ரயில்வே துறை சார்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு,  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம்  பிரித்து கையாள்வது குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  மண்டல பொறியாளர் கார்த்திகை செல்வன் தலைமை வகித்தார்.

பொறியாளர் மாதவன் ஒலி பெருக்கி மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.   மேலும்   வீடு வீடாக சென்று  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், ஏராளமான ரயில்வே ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

Related Stories: