வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு துவக்கம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள தலைவர்கள் ஒன்று சேர்ந்து வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு ஒன்றை நேற்று துவக்கினர். இக்கூட்டமைப்பின் தலைவராக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், செயலாளர் காரை ஊராட்சி மன்ற தலைவர்  வள்ளியம்மாள் செல்வம், பொருளாளராக பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லெனின்குமார்,  துணை தலைவராக பழையசீவரம் மகாலட்சுமி நீலமேகம், துணை செயலாளர்களாக புதுப்பாக்கம் மஞ்சுளா, புத்தகரம் நந்தகுமார், அகரம் சோபா யோகானந்தம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், இணை செயலராக அய்யம்பேட்டை எம்மிஸ்ரளா  கூட்டமைப்பின் கௌரவ தலைவராக வாரணவாசி பிரேமா மோகனசுந்தரம், ஆலோசகராக முத்தியால்பேட்டை அன்பழகன், செயற்குழு உறுப்பினர்களாக கலியனூர் வடிவுக்கரசி ஆறுமுகம்,  ஒழையூர் குமரகுரு, கூத்திரம்பாக்கம் பிரியா, ஆட்டுப்புத்தூர் சுபத்ரா, புரிசை சரஸ்வதி,  கொட்டவாக்கம் சந்திரிகா,  கட்டவாக்கம் அஞ்சலம், தொள்ளாழி சுல்தான் ஹசீனா பேகம், கீழ்ஒட்டிவாக்கம் மகேந்திர வர்மன், கிதிரிப்பேட்டை பொன்மொழி,  தாங்கி சிவலிங்கம், புளியம்பாக்கம் பாலச்சந்தர் ஆகியோரும் தேர்வாகினர். மேலும், கூட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் தேவேந்திரன், துணை தலைவர்  சேகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: