கடன் உதவி வழங்கக்கோரி மகளிர் சுய உதவி குழு கோரிக்கை

காஞ்சிபுரம்: கடன் உதவி வழங்க கோரி, மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் அடங்கிய அவளூர் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரப்பினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாட்டு அடையயும் வகையில்  டாப் செட்கோ திட்டத்தின் லோன் மேளா நடத்தப்பட்டது. தொடர்ந்து, குழுக்கான கடன் கூறி மனு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வாலாஜாபாத் கிளை மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர்சுய குழுக்கள் மனு வரப்பெற்று அங்கு உதவி பெறுவதற்கு ரூ.1,00,000 தயாரான நிலையில் தற்போது ரூ.50 ஆயிரம் தான் வழங்கப்படுவதாக  வாலாஜாபாத் வங்கி மேலாளர் கூறுகிறார். கடன் தொகை ரூ.1 லட்சம் உள்ள நிலையில் 50 ஆயிரம் மட்டும் வழங்குவதாக கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: