×

ஏனாத்தூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்: முடி திருத்துவோர் சங்கம் கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் பகுதியில் வீட்டு மனைக்கு நத்தம் பட்டா வழங்க கோரி, முடி திருத்துவோர் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில், காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்ட சிறப்பு தலைவர் ராஜா, தலைவர் மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட பொது செயலாளர் ஜி.எஸ்.சேகர், பொருளாளர் குமார் ஆகியோர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் வட்டாரத்தை சேர்ந்த நாவீதர் சமுதாயத்தை சேர்ந்த முடி திருத்தம் தொழிலாளர்களுக்கு என காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டர் ஆணைப்படி 1998ம் ஆண்டு பிற்படுத்த நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் மூலம் 132 பேருக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. அதில், 23 பேர் வீடு கட்டி வசித்து வருகிறோம். மற்றவர்களுக்கு 20 ஆண்டுகளாகியும் வீட்டு மனையை அளந்து பட்டா வழங்கவில்லலை. அதனால், அனைவரும் பாதிப்படைகின்றனர்.

எங்களுக்கு ஆதிதிராவிடர் வட்டாட்சியர் மூலம் வழங்கிய பட்டாவை  வருவாய்த்துறை  மூலம் கணக்கில் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே பட்டா பெற்ற 132 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும், இப்போதைய கலெக்டர் வந்த பிறகு தான் வரைபடத்தை வருவாய் கணக்கில் சேர்த்து உள்ளார்கள். ஆனால், எங்களுக்கு நத்தம் பட்டா வழங்கவில்லை ஆகவே,  கலெக்டர் எங்களுக்கு நத்தம் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Collector ,Hair Correcters Association , To issue house title in Enathur area: Barbers' Association petitions Collector
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...