தரமணி பாரதி நகரில் சிதிலமடைந்த மின்கம்பங்கள்: மாற்றித்தர கோரிக்கை

வேளச்சேரி: சென்னை மாநகராட்சி, 178வது வார்டுக்குட்பட்ட தரமணி, பாரதி நகர், காவேரி தெருவில்  50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் உள்ள 2 மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிப்பதால் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவ்வாறு மின் கம்பம் விழுந்தால், மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, வேளச்சேரி கிழக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும்,   மின்வாரிய அதிகாரிகள் இதுவரை  மின்கம்பங்களை  மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிகளில் நடப்பட்ட மின்கம்பங்கள் தற்போது, சிதிலமமடைந்து உள்ளன. அதுமட்டுமின்றி மின் கம்பிகளும் தாழ்வாக தொங்குவதுடன், அறுந்து விழும் நிலையில் உள்ளதால், அச்சத்துடன் வசிக்க வேண்டி உள்ளது. எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை மாற்றித்தர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: