×

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ள கரும்பு விவசாயிகள் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

திருவள்ளூர்: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதவு செய்யாமல் உள்ள கரும்பு விவசாயிகள் 25ம் தேதிக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2021 - 22 அரவைப்பருவத்திற்கு 1.82 இலட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ததுடன் கூடுதலாக 0.23 இலட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பை அருகாமையில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. கரும்பு அனுப்பிய அனைத்து விவசாயிகளுக்கும் அரசு நிர்ணயம் செய்த விலையை நிலுவையின்றி வழங்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 2022 - 23 அரவைப் பருவத்திற்கென இதுவரை 8125 ஏக்கர் பரப்பில் கரும்பு பதிவு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டுள்ள குறியீட்டு அளவான 2.25 இலட்சம் டன்கள் கரும்பை அரவை செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  ஆலை அரவை 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் 2 வது வாரத்தில் துவங்குவதற்கு ஏதுவாக ஆலையின் சுத்திகரிப்புப்பணிகள் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ஆலையின் திருவள்ளுர் மாவட்ட எல்லைக்குட்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து பதிவு மற்றும் பதிவில்லா கரும்பை எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் இதர ஆலையோ அல்லது முகவர்களோ கடத்திச் செல்வது கரும்பு கட்டுப்பாட்டு ஆணையின் தடை செய்யப்பட்டுள்ளது.

கரும்பு கடத்தலில் ஈடுபடும் முகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கரும்பு கடத்திச் செல்லும் போக்குவரத்து வாகனங்களின் உரிமம் பறிமுதல் செய்வது உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இந்த ஆலை விவகார எல்லையில் பயிரிடப்பட்டு ஆலைக்குப் பதிவு செய்யாமல் உள்ள கரும்பு விவசாயிகள் சம்மந்தப்பட்ட கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் வழங்கி தங்களின் கரும்பை வருகிற 25 ந் தேதிக்குள் பதிவு செய்யவும். கரும்பில் நுண்ணீர் பாசனம் அமைக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மான்யமும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு பருகரணை மற்றும் பருசீவல் நாற்று பயன்படுத்தி நடவு செய்யும் விவசாயிகள், அரசு வழங்கும் மானியத்தைப் பெற்று பயனடையுமாறும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruthani Cooperative Sugar Mill , Sugarcane farmers who have not registered with Tiruthani Cooperative Sugar Mill should register by 25th
× RELATED திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு...