×

அரசு மகளிர் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருத்தணி: அரசு மகளிர் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்ச்சி   நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் டிஎஸ்பி விக்னேஷ் பேசியபோது, போதையால் சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது.

அதனால் குடும்பத்திற்கும், தனி நபர்களுக்கும் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து விளக்கி பேசினார். மேலும் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு  எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் திருத்தணி  இன்ஸ்பெக்டர் ஏழுமலை முன்னிலை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமரவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா நன்றி கூறினார்.

Tags : Govt Girls School , Anti-drug awareness program in Govt Girls School
× RELATED அரசு மகளிர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா