×

மப்பேடு அருகே 4 வழிச்சாலைக்காக சாலை விரிவாக்கம் 311 மரங்கள் ரூ. 10.83 லட்சத்திற்கு ஏலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் உட்கோட்டம் மேற்கு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி மாநில நெடுஞ்சாலை மற்றும் மணவாள நகர் - மேல்நல்லாத்துார் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் 2021 - 22 ம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. அதன்படி தற்பொழுது சுங்குவார்சத்திரத்தில் இருந்து பன்னூர் வரை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கொட்டையூரில் இருந்து மப்பேடு வரை 26.7வது கிலோ மீட்டரிலிருந்து 30.9 கிலோ.மீட்டர் வரை சாலையின் இருபுறமும் உள்ள 311 உ பச்சை மரங்கள் இருக்கின்றன.

இந்த சாலையை 4 வழி சரியாக விரிவாக்கம் செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் உதவி கோட்டப் பொறியாளர் எஸ்.ஜே.தஸ்நேவிஸ் பெர்னாண்டோ, உதவிப் பொறியாளர் பிரவீன் மற்றும் அனைத்து அலுவலர்கள், பொது மக்கள் முன்னிலையில் சாலையின் இருபுறமும் உள்ள 311 உயிருள்ள பச்சை மரங்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 4 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அப்போது திறந்த வெளி ஏலத்தில் 311  பச்சை மரங்கள் ரூ.10.83 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Mapedu , Road widening for 4 lane near Mapedu 311 trees Rs. 10.83 lakhs bid
× RELATED வேலைக்கு செல்லாததால் ஆத்திரம்...