×

பேரிட்டிவாக்கம் கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையம்

ஊத்துக்கோட்டை: பேரிட்டிவாக்கம்   கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி மையம் இ-சேவை மையத்தில்  செயல்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை  அருகே பூண்டி  ஒன்றியம் பேரிட்டிவாக்கம்  ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையம் 1990 - ம் ஆண்டு கட்டப்பட்டது . இதில் அதே பகுதியை சேர்ந்த 20 - க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர் . இவர்கள் படித்து வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்தும்  மேல்தளம்  சேதமடைந்தும்,  கட்டிடம் விரிசல் ஏற்பட்டும்  உள்ளது.

விஷப்பூச்சிகள் அங்கன்வாடி மையத்தின் உள்ளே வருகிறது. இந்த விஷப்பூச்சிகள் தீண்டி விடுமோ  என்ற அச்சத்தில்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு தயங்குகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பூண்டி  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம்., மேலும் அங்கன்வாடி மைய கட்ட வேண்டும் என வலியுறுத்தி கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இது வரை எந்த நடவடிக்கையும்  எடுக்க வில்லை.  கடந்த 3 வருடமாக  மாணவ - மாணவிகள் ஊருக்கு வெளியே உள்ள இ - சேவை மையத்தில் படித்து வருகிறார்கள்.உடனே இப்பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர்.

Tags : Ankanwadi ,Paritivakam , Damaged Anganwadi Center in Baritivakkam village
× RELATED திமிரி அருகே திடீர் ஆய்வு...