கட்டுமான தொழிலாளர் மத்தியசங்கம் சார்பில் மீஞ்சூரில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பொன்னேரி: கட்டுமான தெழிலாளர் மத்தியசங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் விவசாய தொழிலாளர் கட்சி மற்றும் கட்டுமான  தொழிலாளர் மத்தியசங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன். குமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று

நடந்தது. இதில், தொழிலாளர்களூக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்த  முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும்.

மேலும், கட்டுமான  மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வருகின்ற 30ம் தேதி நடைபெற உள்ளதாகவும். அதில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தனிக்குழுவை அமைக்க வேண்டும் மத்திய அரசு ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய வேண்டும் அல்லது  5 சதவீதம் குறைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த, கூட்டத்தில் மாவட்ட .ஒன்றிய .நகர நிர்வாகிகள்  கட்டுமான தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: