×

அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி உள்ளது. இங்கு, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர்,  மேற்கு கிழக்கு, கரையான்மேடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட  பல பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து, தனது சொந்த செலவில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல்.

துணைத் தலைவர் எம் .டி.ஜி கதிர்வேல் ஆகியோர் 3 சக்கர சைக்கிள் வழங்கி வருகின்றனர்.இந்நி்லையில், தேர்வு செய்யப்பட்ட மூன்று பேருக்கு நேற்று திமுக அலுவலகம் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், தேர்வு செய்யும் பணியும் தொடர்ந்தது நடந்து வருகிறது.

Tags : 3-wheeled bicycle for differently-abled persons in Attipattu first level panchayat
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...