×

ராணிப்பேட்டை, பனப்பாக்கத்தில் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்திக்கான தனி சிப்காட் பூங்கா: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: ராணிப்பேட்டை, பனப்பாக்கத்தில் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்திக்கான தனி சிப்காட் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தோல் பொருட்கள் உற்பத்திக்கான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, பனப்பாக்கத்தில் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்திக்கான தனி சிப்காட் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தோல் மற்றும் தோல் பொருட்கள் அல்லாத உற்பத்தி, முதலீடுகளில் வட மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. அதன்மூலமாக வேலைவாய்ப்பு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தென்கொரிய, ஜப்பான் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட உள்ள பயணத்தின் மூலம் தோல் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்கப்படும். சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக துறை அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின் மூலம் தமிழகத்தில் ஆப்பிள் செல்போன் நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகளை தயாரிக்க சிங்கப்பூர் நிறுவனம் முன் வந்துள்ளது. கீழடியில் கிடைக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ranipet ,Panampakkam ,Ministry of Gold South Govt , Separate Chipcot Park for Non-Leather Manufacturing at Ranipet, Panampakkam: Minister Thangam South Government Information
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...