ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம் வரை விரிவடைகிறது சென்னை மாநகராட்சி எல்லை: அரக்கோணம் -அச்சரப்பாக்கம் வரை நீள்கிறது

* 1,189 சதுர கிலோ மீட்டருக்கு விரிவாக்கம்

* அண்ணாசாலை உள்பட10 முக்கிய சாலைகளை அகலப்படுத்த முடிவு

சென்னை: மூன்றாம் முழுமை திட்டத்தின் கீழ் சென்னை மாநகர எல்லை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வரை விரிவடைவதால் சென்னையின் பரபரப்பளவு 2 மடங்காக அதிகரிக்கும்  வாய்ப்பு உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ சார்பில் சென்னை மாநகர வளர்ச்சிக்கான மாஸ்டர் பிளான் - 3க்கான தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் (மாஸ்டர் பிளான்-3) பயிலரங்கம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் எம்.பி. கலாநிதி  வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அரவிந்த ரமேஷ், சுதர்சனம், பி.சிவகுமார், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, துணைத் தலைமை செயல் அலுவலர் எம்.லட்சுமி மற்றும்  சென்னை பெருநகர பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி  அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைஉயர் அதிகாரிகள் பங்கேற்னர்.

சிஎம்டிஏ, உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுவதற்கான திட்டம் வகுப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகர வளர்ச்சிக்கான மாஸ்டர் பிளான் - 3க்கான தொலைநோக்கு ஆவணத்தை சிஎம்டிஏ தயாரித்து வருகிறது. இந்த பயிலரங்கம் சென்னை பெருநகர் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பங்களிப்பாளர்களுக்கு தொலைநோக்கு திட்ட ஆவண தயாரிப்பின் நோக்கங்களையும் அதனால் எதிர்பார்க்கப்படும் பயன்களை பற்றியும் விளக்கியது. மேலும் சென்னை பெருநகரத்தின் எல்லையை விரிவாக்கம் செய்யும் திட்டம் தொடர்பாக விளக்கப்பட்டது.

சென்னை பெருநகர எல்லையை ராணிப்பேட்டை மாவட்டம் அச்சரப்பாக்கம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வரை விரிவுப்படுத்த முடியு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முழுமை திட்டம் 2026ல் முடிவடைய உள்ள நிலையில் 2027ம் ஆண்டு முதல் 2046ம் ஆண்டு வரையிலான சென்னையின் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த முடிவு செய்ப்பட்டுள்ளது. 2027 முதல் 2046 ஆண்டுக்கான சென்னை மாநகர வளர்ச்சியின் முழுமை திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.  

இந்த ஆவணத்தை பயனாளர்கள் பங்கேற்பு அணுகுமுறை மூலம் சென்னை மாவட்டம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய சிஎம்டிஏ பகுதிக்கு 1,189 சதுர கிலோ மீட்டருக்கு தயாரிக்கப்படுகிறது. இந்த 3ம் முழுமை திட்டத்துக்கான இந்த தொலைநோக்கு ஆவணம், சென்னை பெருநகர பகுதிக்கான நீடித்த சுற்றுச்சூழல், துடிப்பான பொருளாதாரம் மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சிக்கு திட்டமிட பயன்படும். இந்த திட்ட தொடக்க பயிலரங்கை தொடர்ந்து சென்னை பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும்  பயிலரங்கங்கள் நடத்தப்பட உள்ளன. மேலும் 3ம் முழுமை திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதை பற்றி பயனாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பங்கேற்க செய்யும் பிரத்யேக இணையதளம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி: சென்னை முழுமை திட்டம்-3ன் படி அரக்கோணம், அச்சரப்பாக்கம் போன்ற பகுதிகள் வரை சென்னை விரிவுப்படுத்தப்படும். அதன் எல்லை 3 மடங்காக அதிகரிக்கும். தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1.2 கோடி மக்கள் உள்ளனர். 3ம் முழுமை திட்டம் மூலம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக தடுக்க முடியும். சென்னையில் அண்ணா சாலை போன்ற 10 முக்கிய சாலைகள் அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றவுள்ளது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயன்பெறக்கூடிய திட்டங்களை தற்போது மூன்றாம் முழுமை திட்டம் மூலம் தொடங்கப்படவுள்ளது. திமுக ஆட்சியில் தான் 2வது முழுமை திட்டம் துவங்கப்பட்டது. தற்போது 3ம் கட்ட திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க, இந்த பயிலரங்கம் உபயோகப்படும். சென்னை எல்லையை விரிவு படுத்துவது தொடர்பாக 3வருடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* சென்னையுடன் 3 மாவட்டங்கள் இணைப்பு

சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா பேசுகையில், சென்னை பெருநகர் பகுதி 1,189 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சென்னை பெருநகர் பகுதியானது சென்னை மாவட்டம் முழுவதையும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. ’’ என்றார்.

Related Stories: