×

1930-40களில் நடக்கும் கதை தனுஷ் படத்தில் சந்தீப் கிஷன்

சென்னை: வசந்த் ரவி நடித்த ‘ராக்கி’,செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த  ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படம், ‘கேப்டன் மில்லர்’.இதில் மிகவும் வித்தியாசமான கேரக்டர் மற்றும் தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில், அர்ஜூன், ஜி.சரவணன், சாய் சித்தார்த் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

கடந்த 1930-40களின் பின்னணியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது. தமிழில் ‘யாருடா மகேஷ்’, ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’, ‘கசடதபற’, ‘நரகாசூரன்’ போன்ற படங்களில் நடித்தவரும், தெலுங்கு ஹீரோவுமான சந்தீப் கிஷன், தனுஷுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அவர் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து ‘மைக்கேல்’ என்ற பன்மொழிப் படத்தில் நடித்து வருகிறார். பேமிலிமேன் 2 வெப்சீரிஸிலும் சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார்.

Tags : Sandeep Kishan , Sandeep Kishan in Dhanush, a story set in the 1930s-40s
× RELATED கேப்டன் மில்லர் – திரைவிமர்சனம்