டெல்லி போலீசார் ஜாக்குலினிடம் தீவிர விசாரணை

புதுடெல்லி: டெல்லி தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த  வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் டெல்லி போலீசார் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி ஆதிதி சிங் உள்ளிட்ட பலரிடம்  மோசடி செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர்.

மோசடி செய்த பணத்தை இவர் பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ்,நோரா பதேஹி உள்ளிட்டோருக்கு தாராளமாக செலவு செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஜாக்குலின், நோராவுக்கு சுகேஷ் ஆடம்பர கார்களை வாங்கி கொடுத்தது அமலாக்க துறை விசாரணையில் அம்பலமானது. சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன்  ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று அமலாக்கத்துறை  குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பிங்கி இரானி என்பவர் ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகரிடம்  அறிமுகப்படுத்தி வைத்தார். கடந்த புதன்கிழமையன்று ஜாக்குலின்,பிங்கி ஆகியோரிடம் டெல்லி பொருளாதார குற்ற பிரிவு போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பொருளாதார குற்ற பிரிவு போலீசார் ஜாக்குலினிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Related Stories: