×

அக்.14ல் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யு தலைவர் ராஜா ஸ்ரீதர் தகவல்

சென்னை: புதிய பென்ஷன்திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே தொழிலாளர்கள் வரும் அக்.14ம் தேதி நாடுதழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எஸ் ஆர் எம் யு தலைவர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராக 1968 ல் நடைபெற்ற ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் உயிர் நீத்த ரயில்வே தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்ஆர்எம்யு தலைவர் ராஜா ஸ்ரீதர், உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் திரளான ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்று மறைந்த ஊழியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னர்,இது கூறித்து எஸ்ஆர்எம்யு தலைவர் ராஜா ஸ்ரீதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய பென்ஷன் திட்டம் தனியார் ரயில்கள் இயக்கம், ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு, நிரந்தரப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு அளிப்பது உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வரும் அக்டோபர் 14 ம் தேதி நாடு தழுவிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் எல்லா போராட்டங்களுக்கும் வெற்றி உண்டு,தொழிற்சங்கங்களை ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் பயோமெட்ரிக் முறையை வரவேற்கிறோம். நவீன அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளுக்கு எஸ்ஆர்எம்யு தனது ஆதரவை தெரிவிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags : SRMU ,President ,Raja Sridhar , Railway employees to go on hunger strike on October 14: SRMU President Raja Sridhar informs
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!