நவம்பர் மாதத்திற்கான ரூ300 டிக்கெட் நாளை வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்திற்கான ரூ300 சிறப்பு நுழைவு டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 9 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. நவம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நவம்பர் மாதத்திற்கான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட  ஆர்ஜித சேவைகளுக்கான எலக்ட்ரானிக் டிப் (குலுக்கல்) மாலை முதல் பதிவு செய்யப்படும். அக்டோபர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனம் செய்வதற்கான டோக்கன்கள் இலவச டிக்கெட் 22ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிரமோற்சவம் நடைபெறும் நாட்களுக்கு (1 ம்தேதி முதல் 5ம் தேதி வரை) டிக்கெட் பிளாக் செய்யப்பட்டு வெளியிடப்படும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: