×

இந்தியா-ஆஸி. நாளை முதல் டி.20 போட்டியில் மோதல்: வெற்றியுடன் தொடங்குவது நம்பர் 1 அணியா, நடப்பு உலக சாம்பியனா?

மொகாலி: இந்தியாவுக்கு எதிராக 3 டி.20 போட்டிகளில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வந்துள்ளது. இரு அணிகள் இடையே முதல் டி.20 போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. இதற்காக ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று 2வது நாளாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஆசிய கோப்பையில் தோல்வியால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சொந்தமண்ணில் சிறப்பாக ஆடவேண்டிய நெருக்கடி உள்ளது. பேட்டிங்கில் ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோஹ்லி என முதல் 3இடத்தில் மாற்றமில்லை. அடுத்த இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வர். டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாததால் ரிஷப் பன்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும்.

இதனால் தினேஷ்கார்த்திக் களம் இறங்குவதுசந்தேகம் தான். காயத்தில் இருந்து மீண்டுள்ள பும்ரா, ஹர்சல்பட்டேல் வருகை வலு சேர்க்கிறது. இவர்களுடன் பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், சாஹல்  இடம்பிடிப்பர். கூடுதலாக ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் போட்டியில் அஸ்வின், அக்சர்பட்டேல் உள்ளனர். இதில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மறுபுறம் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்  ஆகியோருடன்  புதுமுக அதிரடிவீரர் டிம் டேவிட்  மிரட்டகாத்திருக்கின்றனர். பவுலிங்கில் வேகத்தில் ஹேசல்வுட், கம்மின்ஸ் , சீன் அபோட் ,சுழலில் ஆடம் ஜம்பா,ஆஷ்டன் அகர் இடம் பிடிக்கலாம்.

உலக கோப்பை டி.20 தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுவதால் ஆடும் லெவனைதேர்வு செய்ய பெரிதும் உதவும்.  மேலும் நடப்பு உலக சாம்பியன்  ஆஸ்திரேலியாவும், நம்பர் 1 டி.20 அணியான இந்தியாவும் மோதுவதால் ரசிகர்களுக்கு பெரும் தீனி காத்திருக்கிறது நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ராசியான மொகாலி: பஞ்சாப் மாநிலம்  மொகாலியில் உள்ள பிந்த்ரா ஸ்டேடியத்தில் இதுவரை 5 டி.20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் இந்தியா 2009ல் இலங்கை, 2016ல் டி.20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, 2019ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக என 3 டி.20 போட்டிகளில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது. இந்த 3ஆட்டத்திலும் சேசிங் செய்துதான் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா இங்கு 2 போட்டிளில் ஆடி ஒரு தோல்வி(இந்தியாவுடன்), ஒரு வெற்றி(பாகிஸ்தானுக்கு எதிராக)கண்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இங்கு  மோத உள்ளன.  பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்சில் இந்தியா 2009ல் இலங்கைக்கு எதிராக 211/4 ரன் குவித்ததுதான் அதிகம். . ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக 193/4 ரன் அடித்தது.

இதுவரை நேருக்கு நேர்...
டி.20 போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்குநேர் மோதி உள்ளன. இதில் 13ல் இந்தியா, 9ல் ஆஸ்திரேலியா வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ஆஸி. 3, இந்தியா 2ல் வென்றுள்ளன. இதற்கு முன் இரு அணிகளும் 9 டி.20 தொடர்களில் மோதியதில் 4முறை இந்தியாவும், 2 முறை ஆஸ்திரேலியாவும் கைப்பற்றி உள்ளது. 3 தொடர்  சமனில் முடிந்துள்ளது.
* ஆஸி.க்கு எதிராக இந்தியா 2013ல் ராஜ்கோட்டில்202/4 ரன் எடுத்த தான் அதிகபட்சம். இதே போட்டியில் ஆஸி.201/7 ரன் அடித்தது தான் பெஸ்ட் ஸ்கோர்.
* மெல்போர்னில் 2008ல் இந்தியா 74ரன்னிலும், மிர்பூரில் ஆஸி, 86 ரன்னிலும் சுருண்டதுதான் குறைந்த பட்ச ஸ்கோராகும்.
* ஆஸி.க்குஎதிராக கோஹ்லி 19 போட்டியில் 7 அரைசதத்துடன் 718 ரன்னும்,பிஞ்ச் , இந்தியாவுடன் 15 போட்டியில்2 அரை சதத்துடன் 440ரன்னும் எடுத்து டாப்பில் உள்ளனர்.
* பவுலிங்கில் பும்ரா 11 போட்டியில் 15  விக்கெட்டும், வாட்சன் 8 போட்டியில் 10 விக்கெட்டும் எடுத்து முதல் 2 இடத்தில் உள்ளனர்.

ஹர்திக்-கோஹ்லி நடனம்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி மற்றும் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். தி பீட்நட்ஸின் ‘சே அகபோ’ நடனத்தில் ஹர்திக், உற்சாகத்துடன் ஈடுபடும்நிலையில் கோஹ்லியால் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. நாங்கள் எப்படி செய்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும் என்று ஹர்திக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கோஹ்லி பதிலளித்து சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.


Tags : India ,Aussie ,T20 , India-Aussie Clash in T20 from tomorrow: Will it be the No. 1 team or the reigning world champions who start with a win?
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...