திருமூர்த்தி அணையிலிருந்து நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் , பூசாரிநாயக்கன் ஏரி   பாசனப்பரப்பு பயனடையும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து, நீர் இருப்பைப் பொறுத்து, 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு 20.09.2022 முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்திலுள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories: