×

மூன்றாம் முழுமைத் திட்டம் 2027-2046-க்கான தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலுக்கான திட்ட தொடக்கப் பயிலரங்கம்: அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அண்ணா, அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்பு

சென்னை பெருநகரப் பகுதிக்கான மூன்றாம் முழுமைத் திட்டம் 2027-2046-க்கான தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலுக்கான திட்ட தொடக்கப் பயிலரங்கம் இன்று (19.09.2022) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அண்ணா சாலையில் உள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் நடைபெற்றது.

இப்பயிலரங்கில் மாண்புமிகு குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் / சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் திருமதி. ஆர். பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் திரு. ஹிதேஸ் குமார் எஸ். மக்வானா இ.ஆ.ப.,  சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்-செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைமை செயல் அலுவலர் திருமதி எம். லக்ஷ்மி இ.ஆ.ப., சென்னைப் பெருநகரப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை செயலாளர்கள், கல்வியாளர்கள், அரசு சாரா அமைப்பினர், அலுவலர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.
    
அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் மூன்றாம் முழுமைத் திட்டத்தில் இடம்பெறச் செய்யும் விதத்தில் அவர்களது கருத்துக்களை தெரிந்து கொள்ள ‘பங்குதாரர்கள் பங்கேற்பு வலை தளத்தை’ மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு. முத்துசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த வலை தளத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புப் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மூன்றாம் முழுமைத் திட்டம் குறித்த எதிர்பார்ப்புகளையும் கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளம் கைப்பேசியிலும் செயல்படத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கில் பங்குபெற்ற பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அக்கருத்துக்கள் மூன்றாம் முழுமைத் திட்டத்திற்கான தொலை நோக்கத்தை நிர்ணயிக்க பெரிதும் உதவும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர்-செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags : Minister ,Anna ,Muthusamy ,N. Moe Andarasan , Project Inaugural Workshop for Preparation of Vision Document for Third Comprehensive Plan 2027-2046: Minister S.Muthusamy chaired Anna, Minister Tha.Mo. Anbarasan participated
× RELATED திமுக அரசு பொறுப்பேற்று 4ம் ஆண்டு...