வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி மும்முரம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழை தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு பகல் பாராமல் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் புகழேந்தி கூறியதாவது, வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 800 பேர் இந்தாண்டு உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மூன்று அல்லது நான்கு முறை பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்டும். இந்தாண்டு சரி பாதி அளவு கூட உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை என்றார்.

Related Stories: